ஆலவட்டத் தாய் முகத்தைக் கண்டு தொழ வா
ஆலவட்டத் தாய் முகத்தைக் கண்டு தொழ வா
திருவருள் காட்டும் பதம் தன்னிலே வந்து-விழ வா நெஞ்சே
(2)
ஆலவட்டத் தாய் முகத்தைக் கண்டு தொழ வா
வாழ்வெனும் சக்கரத்தில் நீ சுழன்றே (2)
அந்த மாயச் சாகரத்தில் நன்குழன்றே (2)
இருந்தாய்
ஆலவட்டத் தாய் முகத்தைக் கண்டு தொழ வா
( Music )
ஆயிரம் பாபமுந்தன் தலையெழுத்து
என்று கூடத் தொடர்ந்திருக்கும் கழுத்தறுத்து...ஆ
ஆயிரம் பாபமுந்தன் தலையெழுத்து
என்று கூடத் தொடர்ந்திருக்கும் கழுத்தறுத்து
ஆயினும் தாயிடத்தில் வரும்போது
ஆயினும் தாய்பதத்தில் விழும்போது
நீ அடையும் பேறின் முன் அது தூசு (2)
ஆலவட்டத் தாய் முகத்தைக் கண்டு தொழ வா
( Music )
அருள் பெற வேறு ஒரு நாளெதற்கு
ஆல அன்னையின் கோயில் வந்து சேர்வதற்கு
(2)
இன்றைக்கு மேல் நல்ல நாளுமில்லை
இக்கணம் மேல் நல்ல நேரமில்லை
வந்து அன்னையைக் கண்டு அடை இன்ப நிலை (2)
ஆலவட்டத் தாய் முகத்தைக் கண்டு தொழ வா
( Music )
ஆடி எனும் மாதம் தனில்-சிறப்பு
(pause)
ஆடி எனும் மாதம் தனில்-சிறப்பு
சீரின் சிறப்பளித்து பூரம் என இருக்கு
(2)
பக்தி கொண்டே வளையல் அளிப்போர்க்கு
பக்தி கொண்டே வளையல் அணிவோர்க்கு
உடன் விட்டிடுமே-வினையின் தளை நூறு
உடன் விட்டிடுமே-வினையின் தளை பாரு
ஆலவட்டத் தாய் முகத்தைக் கண்டு தொழ வா
( Music )
அன்னையின் நினைவாக இருப்போர்க்கு
அந்த வினை தரும் பாதை-என்றும் தெரியாது
அன்னையின் நினைவாலே சிறப்போர்க்கு
அந்த வினை தரும் பாதை-என்றும் கிடையாது
என்பதைச் சொல்ல வந்தேன் பணிவோடு (2)
அந்த அன்னையின் ஆசி-தந்த துணிவோடு
எந்தன் அன்னையின் ஆசி-பெற்ற துணிவோடு
நெஞ்சே ..
ஆலவட்டத் தாய் முகத்தைக் கண்டு தொழ வா
( Music )
ஏது குறை உனக்கு ஏதிருக்கு
அன்னை அன்பு-முகம் எழிலாய் எதிர் இருக்கு
(2)
நல்-புரட்..டாசி-நவ ராத்திரியில் (2)
எங்கள் அன்னை-கொடுக்கும் அருள் மேலெதற்கு
வேறெதற்கு .. பயம் ஏன் உனக்கு
ஆலவட்டத் தாய் முகத்தைக் கண்டு தொழ வா
( Music )
என்னவெல்லாமோ வரும் அடியவர்க்கு .. அடியவர்க்கு
என்னவெல்லாமோ-வரும் அடியவர்க்கு
நல்ல காலமென்று என்று குமையவென்று
(2)
அன்னையின் காட்சி-பெற வரும்-நாளில் (2)
கண்டவுடன் வினையோடும் விடிந்திடும்-வாழ்வே
வினை விடுத்தோடும் அன்னையின் ஆணை ..
நெஞ்சே
ஆலவட்டத் தாய் முகத்தைக் கண்டு தொழ வா
திருவருள் காட்டும் பதம் தன்னிலே
வந்து விழ வா நெஞ்சே
ஆலவட்டத் தாய் முகத்தைக் கண்டு தொழ வா
வருவாய் ... வருவாய்
No comments:
Post a Comment