Monday, July 19, 2021

36. ஆயிரம்-ஆயிரம்(ஆயிரம் கோடி நிலவுகள் பூத்த-சூலமங்கலம்) **


ஆயிரம்-ஆயிரம் ஜன்ம-வினை-விட்டிடும் பாரு
அந்த சத்குரு-நாதனருள்-விழி உன்மேல்-பட்ட போது
(1+SM+1+SM)
உன்னை உலகிட்ட அன்னையும் தந்தையும்-அன்பாறு
உன்மனம் ஆன-இருள் விட சத்குரு மேல் புவி மேலாரு ?
(MUSIC)
லோகத்தின் மீதிலுன் வாழ்வெனும் சக்கரம் தானோடும்
அந்த செக்கில்-சுழன்றிடும் மாட்டினைப் போலவே நாள்-தோறும்
(2)
உன்னைத் தொடர்ந்திடு..கின்ற-அறியா..மை-நோயும்
அந்த ஸத்குருநாதன்-பதம் தொழுமக்கணம் சென்றொடும்
ஸத்குருநாதன்-பதம் தொழுமக்கணம் சென்றொடும்
ஆயிரம்-ஆயிரம் ஜன்ம-வினை விட்டிடும் பாரு
அந்த சத்குரு-நாதனருள் விழி உன்மேல்-பட்ட போது
(MUSIC)
நெஞ்சில் உதிக்கிற பற்பல ஐயங்கள் தூளாகும்
குரு நாதன்-மேல் வைக்கிற நம்பிக்கை தும்பிக்கை போலாகும்
(2)
நெஞ்செனும் வீட்டதன் பூட்டறியாமையின் நோயாகும் 
எந்தப் பூட்டும் திறக்கிற சாவி குரு-வாய்ச் சொல்லாகும்
நெஞ்சப் பூட்டைத் திறக்கிற சாவி குரு-வாய்ச் சொல்லாகும்
ஆயிரம்-ஆயிரம் ஜன்ம-வினை விட்டிடும் பாரு
அந்த சத்குரு-நாதனருள் விழி உன்மேல்-பட்ட போது
(MUSIC)
எண்ணச் சிறகினைக் கட்டிப் பறக்கும் கிளியானாய்
என்றும் தன்னை மறந்தெங்கும் சுற்றித் திரிந்திடும் மானானாய்
(2)
அந்த நிலை விட காக்கும் குருவிடம் நீ போனால்
பல ஜென்மங்களில் செய்யும் நல்ல தவப்பயன் நீ காண்பாய்
ஜென்மங்களில் செய்யும் நல்ல தவப்பயன் நீ காண்பாய்
ஆயிரம்-ஆயிரம் ஜன்ம-வினை விட்டிடும் பாரு
அந்த சத்குரு-நாதனருள் விழி உன்மேல்-பட்ட போது
உன்னை உலகிட்ட அன்னையும் தந்தையும் அன்பாறு
உன்மனம் ஆன-இருள் விட சத்குரு மேல் புவி மேலாரு ?

முதல் பக்கம்



No comments:

Post a Comment