Friday, January 22, 2021

9. ஆலத்தாயின் தரிசனத்தை(ஆயர்பாடி மாளிகையில்) ***

 ஆலத்தாயின் தரிசனத்தை  எங்குமிலா  அதிசயத்தை
ஆலயத்தில் பார்த்திடவே வாரீரோ
(SM)
ஆலத்தாயின் தரிசனத்தை  எங்குமிலா  அதிசயத்தை
ஆலயத்தில் பார்த்திடவே வாரீரோ
அவள் தரிசனத்தில் கரிசனத்தை அளவில்லாமல் வழங்குகிறாள்
நாடியிங்கே அதைப் பெறவே வாரீரோ
தேடிவந்தே பதம்-பணிந்தே காணீரோ
ஆலத்தாயின் தரிசனத்தை  எங்குமிலா  அதிசயத்தை
ஆலயத்தில் பார்த்திடவே வாரீரோ
(MUSIC)

அன்னையுள்ள  கருவறையில் எண்ணையிட்ட விளக்கொளியில்
அவள்-அழகாய்ச் சிரித்திருப்பாள் காணீரோ
(2)
அந்த சுந்தரத்தை கண் கிறங்க பக்தரெல்லாம் மனம் மயங்க
கண்டிருப்பார் நின்றிருப்பார் ஆஹாஹா
தன்னிலையை மறந்திருப்பார் ஆஹாஹா
ஆலத்தாயின் தரிசனத்தை  எங்குமிலா  அதிசயத்தை
ஆலயத்தில் பார்த்திடவே வாரீரோ
(MUSIC)

காசுபணம் தேவையில்லை பெரும்-தனத்தால் பயனுமில்லை
ஆடம்பரம் ஏதுக்கய்யா வாரீரோ
(2)
மனத் தூய்மையொன்றே போதும் அட-வேறெதுவும் தேவையில்லை
ஆலத்தாயைக் காணுதற்கு வாரீரோ
அன்னையினைக் காணுதற்கு வாரீரோ
ஆலத்தாயின் தரிசனத்தை  எங்குமிலா  அதிசயத்தை
ஆலயத்தில் பார்த்திடவே வாரீரோ
(MUSIC)
வாய்ப்பிதனைத் தவறவிட்டால் உலகில்-மனம் சிதறிவிடும்
அன்னையிடம் புகலடைய வாரீரோ
(2)
அவள் கடைவிழியில் படுவதற்கும் உயர்வழியை அடைவதற்கும்
தேடியிங்கே ஓடியிங்கே வாரீரோ
தேடியிங்கே நாடியிங்கே வாரீரோ
ஆலத்தாயின் தரிசனத்தை  எங்குமிலா  அதிசயத்தை
ஆலயத்தில் பார்த்திடவே வாரீரோ (2)

முதல் பக்கம்

No comments:

Post a Comment