Saturday, January 2, 2021

8. தந்திடுவாய் அம்மா (அன்றொரு நாள் இதே நிலவில்)

 


தந்திடுவாய்  அம்மா அருளை
தந்திடம்மா மெய்ப் பொருளை 
(Harmonium)
தந்திடுவாய்  அம்மா அருளை
தந்திடம்மா மெய்ப் பொருளை 
நான் பாடிடுவேனே உன் புகழை 
நீ  அளிப்பாயே நல் குரலே  
(Harmonium)

என்றும் திருநாள் உன்காட்சி பெறும்-நாள் 
என்றும் நன்னாள் உன்கோவில் வரும்-நாள் 
பாசத் தருவாய் ஆட்சி புரிவாய் 
பாசம் தருவாய் ஆட்சி புரிவாய்     
ஈடு யாருமில்லை நீ மாட்சிமையின் ஓர் உருவே
தந்திடுவாய்  அம்மா அருளை
தந்திடம்மா மெய்ப் பொருளை 
நான் பாடிடுவேனே உன் புகழை 
நீ  அளிப்பாயே நல் குரலே  
(Harmonium)

ப்ரேமை வடிவே என் ஆலத்தாயே 
பாரின் விடிவே உன் பார்வை தாயே 
சேர்த்து அணைப்பாய்ப் பார்த்துக் கொடுப்பாய் (2)
வேறு பார்க்கவில்லை நான் உன் போலே என் தாயே
தந்திடுவாய்  அம்மா அருளை
தந்திடம்மா மெய்ப் பொருளை 
நான் பாடிடுவேனே உன் புகழை 
நீ  அளிப்பாயே நல் குரலே
  

முதல் பக்கம்


No comments:

Post a Comment