உறவும் பிறவும்-உலகில் தேடி-வரலாம்
(Beats)
ஆலவட்ட அம்மா-உனைப் போல வருமோ
(Beats)
மாடியிலே வீடமைத்து வாழ்ந்திடினும்
(Beats)
அன்னையுந்தன் அடிநிழலை அது-தருமோ
(Beats)
அம்மா உலகில்-உனக்கு ஈடு வருமோ
ஆலவட்ட அம்மா-உனைப் போல வருமோ
(2)
பொன்னும் பொருளும்-வீடு பேறு-தருமோ (2)
ஆலவட்ட அம்மன்-கோயில் போல-வருமோ
அம்மா உலகில் உனக்கு ஈடு வருமோ ..
(MUSIC)
மனதில்-வரும் பக்தி கொண்டே நாடி வருவோம்
இகபர சுகம்-ஒன்றே வேண்டி வருவோம்
(2)
மாயவினை போக-உன்னைத் தேடி வருவோம் (2)
அன்னையின் அபயக்கரத்தை நாடி-வருவோம்
அம்மா உலகில்-உனக்கு ஈடு வருமோ
ஆலவட்ட அம்மா உனைப் போல வருமோ
(MUSIC)
(Fast beats)
பக்திக் கண்ணீர் வடித்து பாடி வருவோம்
கண்ணனவன் மாமி-உந்தன் அருள் பெறுவோம்
(2)
ஆலவட்ட அம்மன்-உன்னை நாடி வருவோம் (2)
உன்னையல்லால் யாரையம்மா சரணடைவோம்
என்றும் உன்னையல்லால் யாரையம்மா சரணடைவோம்..
(SM)
அம்மா உலகில் உனக்கு ஈடு வருமோ
ஆலவட்ட அம்மா உனைப் போல வருமோ
பொன்னும் பொருளும்-வீடு பேறு-தருமோ
ஆலவட்ட அம்மன்-கோயில் போல-வருமோ
அம்மா உலகில் உனக்கு ஈடு வருமோ …
No comments:
Post a Comment