Aligned to KARAOKE
ஆலவட்ட அம்மன்-கோவில் திருவிழா
தினம் அன்னையவள் தரிசனத்தால் மகிழ்ச்சி-பொங்கும் பெருவிழா
(2)
ஆலவட்ட அம்மன்-கோவில் திருவிழா
(MUSIC)
இடைவிடாமல் செய்துவந்தோம் வினை-பல நூறு (2)
பெருக்கெடுத்தே ஓடும்-வினைப் பயன் எனும் ஆறு (2)
தொன்று தொட்டு வந்துருத்தும் அவைதரும்ஊறு (2)
அதனைச் சென்று ஓட வைக்கும் அன்னையைப் பாரு (2)
அன்னையைப் பாரு
ஆலவட்ட அம்மன்-கோவில் திருவிழா
தினம் அன்னையவள் தரிசனத்தால் மகிழ்ச்சி-பொங்கும் பெருவிழா
ஆலவட்ட அம்மன்-கோவில் திருவிழா
(MUSIC)
சென்றே அடைந்திட அவளடி மஞ்சம்
என்றே இருக்குது சென்றடை தஞ்சம்
(2)
போய்-வருவாய் தஞ்சம் நீ-அடைவாய் (2)
(MUSIC)
நல்-மொழி கேளுங்கள் உய்வழி தேடுங்கள் (2)
ஆலயம் நாடுங்கள் அன்னையைப் பாடுங்கள் (2)
நெஞ்சம் உருகிப் பா..டு அவள் அருளை நாடு
நெஞ்சம் உருகிப் பா..டு அவள் அருளை நாடு (2)
பாடிடு வா வந்து பாடிடுவா (4)
No comments:
Post a Comment