Wednesday, September 18, 2019

25. சீர்மிகு சென்னை (கந்தசஷ்டி கவசம்) ** ALL தோஷத்தை


விருத்தம்
துதிப்போர்க்கு வல்வினை போம்;துன்பம்போம்;
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம்
பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும்,
இங்கு-அருள் கோயில்-கொண்ட-தெய்வங்களை.
பிறவி இடர்-தீர முனைப்பிலிந்தக்
கணத்திருந்தே நெஞ்சே நினை
________________
(SHORT MUSIC)

சீர்மிகு-சென்னை உயர்-சிட்ல..பாக்கத்தில்
பேர்பெறு-முத்து லக்ஷ்மி-நகரதில்
பார்புக..ழேந்தி வீதியின்-நடுவில்
திகழ்வது-காணீர் எழில்மிகு கோயில்
(2)
அருள்மிகு-பெருமான் வல்லப கணபதி
அருள்மிகு-வீர ஆஞ்சநேயருடன்
எழில்மிகு-மாதா துர்க்கை-யன்னையுடன்  
குருவும்-நாகரும் அருளிடும் கோவில்

அனைத்துக்கும் முதலாய் கணத்துக்கும் முதலாய்
கணபதி பெருமான் இருக்கார் வருக
*ஆங்கவர் நினைவாய் வருக வருக
நேசத்துடனருள் தருவார் பெறுக

மாருதி-ராயர் அருள்-பெற வருக
பேறென நன்மதிச் சித்தம் பெறுக
வினையினை அனுமன் சீக்கிரம் விலக்க
கதியதன் பலனாய்ச் சடுதியில் பெறுக
(MUSIC)
அடடா துர்க்கை எழில் முகம் மிளிர
பிறவிப் பிணியைத் தொடரா விடுக
 மனதினில் துர்க்கா துர்க்கா-நமோ என
வினையின் பிடியும் உடனே-அகல
(2)
தருவின் அடியில் அமர்-குரு காண்க
அவரின் அடி-பணிந்து எல்லாம் பெறுக
நம்மை ஆட்டும் ராகுவும் கேதுவும்
துயர்தரும்-தோஷத்தைப் பாங்காய்-விலக்கும்

நாகர் அருளும் சன்னதியிலங்க
விரைந்தடி பணிய காற்றாய் வருக
 பொய்யில் மெய்யும் மெய்யில் பொய்யும்
சதமென தினமும் உலவிடும் கலியின்

கொடுமை விலகும் மதியொளி கூடும்
கலை-கற்..றதன்-பின் சித்தமும் ஒளிரும்
வண்ணம்-யாவரும் அருளினைப் பெறவும்
வந்திடலாமிங்கு தடையில்லை அறவே .. !




No comments:

Post a Comment