Tuesday, September 17, 2019

21. வேகமாகப் பெண்ணே (மாடு மேய்க்கும் கண்ணே) ** ALL


வேகமாகப் பெண்ணே நீ போவதெங்கே சொல்லேன் (2)

நானும் உன் கூட வரேன் பேச்சுத் துணையாக வரேன்  (2)
ஜோடியாத்தான்  போய் -வரலாம் தனியே-நீயும் போகவேண்டாம்   
வேகமாகப் பெண்ணே 

நீ போவதெங்கே சொல்லேன்


ஆஹா-சந்..தோஷம்- பாட்டி  என்ன-சொன்னாய் பாசம்-காட்டி (2)
ஆனந்தமாய்க் கோவிலுக்கு ஸ்வாமி பாக்கப் போய் வரலாம்
போய்-வரலாம் தாயே நடை-கட்ட..லாம்-வாயேன்

தள்ளாத-என் வயதில் என்னையும்-யார் கூட்டிச்செல்வார்
என்றிருந்த எனக்குத்-துணை ஆண்டவன்-போல் வந்திருக்கே
கூட்டிப் போகும் உன்னை நான் வாழ்த்துகிறேன் பெண்ணே

என்ன-ஸ்ரமம் பாட்டியம்மா  ரொம்ப-ரொம்ப புண்யம் அம்மா
கோவிலுக்குச் சென்று பின்னால் வீடு வரை விட்டுச் செல்வேன்
போய்-வரலாம் தாயே நீயும்-வ..ரலாம் வாயேன் (2)

நாமப்-போற அந்தக்-கோவில் பத்தி-கொஞ்சம் எனக்குச்-சொல்லேன் (2)
என்ன-என்ன சன்னதிகள் இருக்கு-தென்று விளக்கிச்-சொல்லேன்
  சொல்லு சொல்லு பெண்ணே..

ஸ்ரீ-வல்லப கணபதியும் வீர-ஆஞ்சநேயருடன் (2)
துர்க்கை-தட்சி..ணா-மூர்த்தி இவர்களுடன்-நாகருமே (2)
கொலுவிருக்கார்-அங்கே-நீ தரிசிக்கலாம்-நன்கே
அவரையெல்லாம்-காட்டி நான் கூட்டிச்-செல்வேன் பாட்டி
போய்வரலாம் பெண்ணே நாம் இப்பொழுதே-கண்ணே
போய்வரலாம் பாட்டி வா இப்பொழுதே பாட்டி
போய்வரலாம் பெண்ணே நாம்-இப்பொழுதே கண்ணே




No comments:

Post a Comment