KARAOKE
வல்லப கணபதி உட னுறை-மாருதி அருள்-தரும் கோயில் வாரீரே (2)
உடனங்கே உயர் அன்னையுமாகிய துர்க்கையும் அருள்தரக் காணீரே
வல்லப கணபதி உடன் உறை-மாருதி அருள்-தரும் கோயில் வாரீரே
(MUSIC)
குருவின்-ரூபமாய் தட்சிணாமூர்த்தி தருவார்-காட்சி காணீரே
நாகர்-தோஷமதை நிச்சயம் களைவார் கடகட-வெனவே வாரீரே
வல்லப கணபதி உட னுறை-மாருதி அருள்-தரும் கோயில் காணீரே
(MUSIC)
கண் த்ரிஷ்டியுமே விடுமே-தானே கணபதி அருளால் வாரீரே
நினைக்கும் முன்னாலே முடிவது போலே அருளிடும் அநுமனைக் காணீரே
வல்லப கணபதி உட னுறை-மாருதி அருள்-தரும் கோயில் காணீரே
(MUSIC)
ஜகன்மாதா ஸ்ரீ துர்க்கையன்பாலே அரவணைத்தாற்றிடுவாள் வாரீரே
மாய வாழ்வினிலும் தாயே-என்றே புகலடைந்திட வென்றால் அவள்-தானே
வல்லப கணபதி உட னுறை-மாருதி அருள்-தரும் கோயில் காணீரே
(MUSIC)
இகலோகமிதே சதமில்லை-என்றே ஞானவான்களெல்லாம் சொல்வாரே
அனுதினம்-ஆலய தரிசனம் புரிந்தால் உயர்வினைப் பெறலாம் என்றாரே
வல்லப கணபதி உட னுறை-மாருதி அருள்-தரும் கோயில் வாரீரே
உடனங்கே உயர் அன்னையுமாகிய துர்க்கையும் அருள்தரக் காணீரே
வல்லப கணபதி உட னுறை-மாருதி அருள்-தரும் கோயில் வாரீரே
No comments:
Post a Comment