Thursday, January 18, 2024

4.ராம ஸ்ரீராமச்..சந்த்ரா நமோநம(நாத பிந்து கலாதி நமோ நம)

 

ராம ஸ்ரீராமச்..சந்த்ரா நமோநம
பக்த ஹ்ருதய நிவாசா நமோநம
மாய மாநுஷ வேஷா நமோ நம
அருள் செய் ஸ்ரீ ராமா


வில்லை வளைக்கின்ற வீரத்தின் சிறப்பு நீ
சொல்லைக் காக்கின்ற தர்மத்தின் பிறப்பு நீ
எல்லை இல்லாத ப்ரேமையின் ரூபமாய் நெஞ்சில் நிறைவாயே

ராம நாமத்தைக் கனிவோடு ஓதலால் நெஞ்சில் தேனாறு பாய்ந்தோடும் ஆதலால்
ஈர நெஞ்சாகும் பாகதைப் பாடலால்
எவ்விதம் உரைப்பேனே

நாதப்ரம்மத்தின் உள்ளூடும் ராமராம்
வேதம்காட்டிடும் சொல்லாகும் ராமராம்
போதம் எல்லாமும் ஆகிய ராமராம்
அதனை உரைப்பேனே

ப்ரபஞ்சம் உள்ளூடும் ஓசையும் ராமராம்
அதனில் நின்றாடும் எல்லாமும் ராமராம்
நாமரூபங்கள் காட்டிடும் ராமராம்
சொல்வேன் ராம் ராம் ராம்

உயிரில் இணைந்தாடும் உணர்வாகும் ராமராம்
உணர்வை உயர்வாக்கும் ப்ரக்ஞானம் ராமராம்
கனவில் நனவாகும் உரைப்போர்க்கு ராமராம்
எங்கும் ராம் ராம் ராம்

பார்புகழ் பாரதம் தோன்றி அயோத்தியில்
மாபெரும் ஆறுபோல் வேகத்தில் கூடியும்
தடங்கலைத் தாண்டியும் ஓடி-தன் மேன்மையைக்
காட்டிய ராம்ராம்ராம்

அண்டம் படைத்திங்கு எல்லாமும் ஆனதாம்
அணுவின் உள்ளேயும் அணுவாகி ஆடுதாம்
தொண்டரின் உள்ளத்தில் ஆன்மாவென்றானதாம்
எல்லாம் ராம் ராமே

தோன்றி வளர்கின்ற ஸ்வயமான ஜோதி ராம்
என்றும் உறைகின்ற விதமான ஆதி ராம்
மண்ணில் பிறக்கின்ற யாவிலும் உயிரும் ராம்
உயிரின் உயிர் ராம்ராம்

ராம ஸ்ரீராம ஜெயராம ராமராம்
ராம ஜெயராம ஸ்ரீராம ராமராம்
ராம ராம்ராம ராம்ராம ராமராம்
சர்வம் ராம்-ராம்-ராம்
(2)
சர்வம் ராம்-ராம்-ராம் (2)




No comments:

Post a Comment