Saturday, February 27, 2021

15. அன்பே தரும் (புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே) **

அன்பே தரும்-ஆலத் தாயின்-விழி 
என்றும் புகல்-தந்..திடும் அவள் அன்னை-மடி
 அன்பே தரும்-ஆலத் தாயின்-விழி 
என்றும் புகல்-தந்..திடும் அவள் அன்னை-மடி
திண்டாட்டம் போக்கும் அவள் திருச் சேவடி
தந்த அனுபூதியைச் சொல்ல ஏதோ மொழி
(2)
அன்பே தரும்-ஆலத் தாயின்-விழி 
என்றும் புகல்-தந்..திடும் அவள் அன்னை-மடி
(MUSIC)

அந்தோ மனம் கலங்கும் வண்ணம் அடி 
தர தினம்-வந்து நமைத்-தாக்கும் இடர்ப்-பேரிடி 
(2)
சென்றோடி நம்மை விட்டுப் போகும்படி 
அன்னை ஒரு பார்வை செய்யும் இடர் ஆகும் பொடி 
அன்னை ஒரு பார்வை போதும் இடர் ஆகும் பொடி
அன்பே தரும்-ஆலத் தாயின்-விழி 
என்றும் புகல்-தந்..திடும் அவள் அன்னை-மடி
(MUSIC)

வழி காட்டும் மறைநான்கின் கருவானவள் 
அவள் நமை-காக்கும் அருள்-ப்ரேமை உருவானவள்
(2)
என் செய்குவேன் என்று மருள்கின்றவர்
தன்னை வா-வென்று தான் அள்ளிக் கொள்கின்றவள்
கண்ணே வா-வென்று தான் அள்ளிக் கொள்கின்றவள்
அன்பே தரும்-ஆலத் தாயின்-விழி 
என்றும் புகல்-தந்..திடும் அவள் அன்னை-மடி
(MUSIC)

 நமக்காக அருள்-காட்ட என்றும் இருப்பாள் 
மன ஆறுதல் தான்-கொடுக்க என்றே இருப்பாள்
(2)
சார்ந்தவர்க்கு பரிவை அந்த அன்னை கொடுப்பாள் 
நாம் விழுவதற்கு முன்னே நம்மை வாரி எடுப்பாள் 
நாம் அழுவதற்கு முன்னே வந்து கண்ணைத் துடைப்பாள்
அன்பே தரும்-ஆலத் தாயின்-விழி 
என்றும் புகல்-தந்..திடும் அவள் அன்னை-மடி
திண்டாட்டம் போக்கும் அவள் திருச் சேவடி
தந்த அனுபூதியைச் சொல்ல ஏதோ மொழி
அன்பே தரும்-ஆலத் தாயின்-விழி 
என்றும் புகல்-தந்..திடும் அவள் அன்னை-மடி

No comments:

Post a Comment