Saturday, February 27, 2021

13. பூவுலகின் (கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்) **

பூவுலகின் மண் நிலங்கள் ஏராள பொன் தனங்கள் 
நிம்மதியைத் தருவதில்லை என் தோழி
(SM)
 பூவுலகின் மண் நிலங்கள் ஏராள பொன் தனங்கள் 
நிம்மதியைத் தருவதில்லை என் தோழி
இந்த ஆலவட்டத் தாயவளின் கோலவிழிப் பார்வையினைக் 
காண மனம் சலிப்பதில்லை என் தோழி
இந்த ஆலவட்டத் தாயவளின் கோலவிழிப் பார்வையினைக் 
காண மனம் சலிப்பதில்லை என் தோழி
ஏன்-தோழி அது ஏன்-தோழி சொல்லடி என்-தோழி அது ஏன் தோழி
(MUSIC)

என் மொழியில் ஐயமென்றால் ஒரு முறை நீ சென்றிடுவாய் 
கண்டிடுவாய் அன்னையினை என் தோழி
என் மொழியில் ஐயமென்றால் ஒரு முறை நீ சென்றிடுவாய் 
கண்டிடுவாய் அன்னையினை என் தோழி
அவள் கருணை-தரும் பனி-விழியை கண்டு-இதம் கொண்ட பின்னால்
(SM)
அவள் கருணை-தரும் பனி-விழியை கண்டு-இதம் கொண்ட பின்னால்
உனது-மனம் உனது-இல்லை என்-தோழி
ஏன்-தோழி அது ஏன் தோழி ;சொல்லடி என்-தோழி அது ஏன் தோழி
பூவுலகின் மண் நிலங்கள் ஏராள பொன் தனங்கள் 
நிம்மதியைத் தருவதில்லை என் தோழி
(MUSIC)

குழந்தைமனம் கொண்டிருப்பாள் குழைந்தை-வரம் தந்திடுவாள் 
தலை-எழுத்தும் மாறச் செய்வாள் என் தோழி
(2)
தாயை நினைக்கும்-போது கண்வழியும் நீரொன்றே போதுமம்மா 
(1+SM+1)
நமது பாபம் கரைந்தோடுது என் தோழி
ஆம் தோழி அடி என் தோழி (2)
(MUSIC)
 அவள்-மடியே புகல்-தருமாம் அவள்-மனமே அருள்-தருவாம் 
அவள்-விழியே நம்-விடிவாம் என் தோழி  
(2)
அடி பிடிப்பில்லாத மனங்கள் கூட  தாயவளின பார்வை ஒன்றால்
(SM)
அடி பிடிப்பில்லாத மனங்கள் கூட  தாயவளின பார்வை ஒன்றால்
அக்கணமே பித்தாகுது என் தோழி (2)
பூவுலகின் மண் நிலங்கள் ஏராள பொன் தனங்கள் 
நிம்மதியைத் தருவதில்லை என் தோழி
இந்த ஆலவட்டத் தாயவளின் கோலவிழிப் பார்வையினைக் 
காண மனம் சலிப்பதில்லை என் தோழி
ஏன்-தோழி அது ஏன் தோழி 
;சொல்லடி என்-தோழி அது ஏன் தோழி

முதல் பக்கம்

No comments:

Post a Comment