Monday, March 9, 2020

5. கௌமாரி எங்கள் காந்தாரி(செல்லாத்தா செல்ல-மாரியாத்தா-LR-ஈஸ்வரி)**

கௌமாரி எங்கள் காந்தாரி 
இந்த பூணித்துறையில் மரடு-கோயில் கொண்ட-அருள் மாரி 
(2)
அம்மாடி கண்-முன்னாடி 
அம்மாடி கண்-முன்னாடி உன் அன்புமுகம் நின்று என்றைக்கும் ஆடுது நெஞ்சில் இதம் கூட்டி

உந்தன்-சந்நிதியில் எந்தக்-கவலையும் சென்று-பறந்தோடி
எங்கள் நெஞ்சம்-தெளிந்து உண்மை-தெரிந்திடப் போகும்-ஜென்மம்-கோடி
கௌமாரி எங்கள் காந்தாரி 
இந்த பூணித்துறையில் மரடு-கோயில் கொண்ட-அருள் மாரி 
(MUSIC)
அந்த-மயில் மீதினிலே அழகாக அமர்ந்துகொண்டு
ஆடுமுந்தன் பேரெழிலை கௌமாரி
ஆஹா  ஆடுமுந்தன் பேரெழிலை கௌமாரி
எம் இருகண்கள் கண்டுபுட்டு உன்னருளில் கட்டுப்பட்டு
எம்-கண்கள் கண்டுபுட்டு உன்னருளில் கட்டுப்பட்டு
இருக்காதோ உன்னெதிரில் கௌமாரி
என்றும் இருக்காதோ உன்னெதிரில் கௌமாரி

கௌமாரி எங்கள் காந்தாரி 
இந்த பூணித்துறையில் மரடு-கோயில் கொண்ட-அருள் மாரி 
(MUSIC)
உன் தலையில் அமர்ந்துகொண்டு அழகாகப் படமெடுத்து
கண்ணெதிரில் ஆடிடுமே காந்தாரி
நாங்கள் கண்டிடவே ஆடிடுமே காந்தாரி
நல் பாம்பாக ஆடி ...
(MUSIC)
நல் பாம்பாக ஆடி-இமை மூடாமல் நின்று-எமைக் காக்காதோ உன்னருளால் காந்தாரி

உந்தன்-சந்நிதியில் எந்தக்-கவலையும் சென்று-பறந்தோடி
எங்கள் நெஞ்சம்-தெளிந்து உண்மை-தெரிந்திடப் போகும்-ஜென்மம்-கோடி

கௌமாரி எங்கள் காந்தாரி 
இந்த பூணித்துறையில் மரடு-கோயில் கொண்ட-அருள் மாரி 
அம்மாடி கண்-முன்னாடி 

போற்றி-போற்றி -மாதா காந்..தாரி-மாதா-
போற்றி போற்றி-போற்றி -மாதா கௌமாரி -மாதா

No comments:

Post a Comment