Monday, September 2, 2019

12. விரைந்து வந்தே காண (மறைந்திருந்தே பார்க்கும்) **** ஊர்வலம்-கணபதி



(Aligned to KARAOKE)


ஜதி & தாளம்

விரைந்து வந்தே காணத் தயக்கமென்ன
(தாளம்)
வாராய்
விரைந்து வந்தே காணத் தயக்கமென்ன
வல்ல கணபதியை-நல்ல குணபதியை இங்கு
(2)
விரைந்து வந்தே காணத் தயக்கமென்ன
ஊர்வலத்தில்..
(SM)
தேரின் ஊர்வலத்தில் 
(SM)
அசைந்துவரும் தேரின் ஊர்வலத்தில்
நன்கு அருள்புரிந்தே விளங்கும் கணபதியை
(2)
இங்கே..
 விரைந்து வந்தே காணத் தயக்கமென்ன
( ஜதி )
எங்கிருந்தாலும்- நம்மை நாடி-வந்தே இந்த
அண்ணலலால்-வேறு யார்-தருவார்
எங்கிருந்தாலும்-அன்பை நாடி-வந்தே இந்த
அண்ணலலால்-வேறு யார்-தருவார்
நாதனின் பதம்-காண நேரமா (2)
அய்யன் பாதத்தை நீ-காண வேண்டாமா
அய்யன் பாதத்தை நீ-காண வா வா வா
ஓடி-வா தேடி-வா நாடி-வா இங்கு வா
விரைந்து வந்தே காணத் தயக்கமென்ன
 ( ஜதி )
ஞாலத்துக்கே தலைவன் நமக்கென்றே வந்து ஞானத்தையே தந்து ஆட்கொளவே 
(2)
மோகத்திலே-இருந்து மீட்டெடுத்து (2)
உயர் போதத்திலே-அன்புத் தந்தையைப் போல் (2)
தேற்றுவார் போற்றுவார் மாற்றுவார் காண வா
விரைந்து வந்தே காணத் தயக்கமென்ன
 ( ஜதி )
தேராடும் பெருமானின் திருமேனி மனமாட
கண்கள்-தனில் நீருமோட
சீரான ஸ்வரத்தோடு அடியவர்கள்- மறையோத  
மற்ற-பிறர் கசிந்து-பாட
கனிவோடு நமக்காக அலங்கரித்துத் தேர்மீது விரைவினில் அருள்கூர  நேரில்-வந்தார்
தூயனைத் தேடிவா தேரிலே காணவா பெருமானை நாடி-வா வா
விரைந்து வந்தே காணத் தயக்கமென்ன
வல்ல கணபதியை-நல்ல குணபதியை இங்கு
விரைந்து வந்தே காணத் தயக்கமென்ன
(Music)- ஜதி



No comments:

Post a Comment