ஆ ..
அடா..டடா-என்றே-மனம் விடாமலே வியந்திடும்
இடை-வி..டாது-சென்றிடும் ஆலவட்டத் தாயிடம்
(3)
நினைத்த-போது தோன்றிடும் அருள்-சுரக்கு..மவள்-முகம் (2)
நினைத்திடாத போதிலும் கூட-நின்று காத்திடும் (2)
அடா..டடா-என்றே-மனம் விடாமலே வியந்திடும்
இடை-விடா..து-சென்றிடும் ஆலவட்டத் தாயிடம் ..
ஒரே-ஒரு மனம் அதற்குள்-எண்ணம் ஆயிரம் .. …
ஒரே-ஒரு மனம் அதற்குள்-எண்ணம்-ஆயிரம்
அதனிடம் மானுடம் எப்பவும் ஆடிடும்
ஒரே-ஒரு மனம் அதற்குள்-எண்ணம்-ஆயிரம்
அதனிடம் மானுடம் எப்பவும்-வாடிடும்
அதனையும் ஈர்த்திடும் அன்னை-ஞான நேத்திரம் (2)
குவலயம் காத்திடும் அவள்-முன்-எம்..மாத்திரம்
அவள் செய்யும் அற்புதம் விளக்குமோ என்-திறம்
அடா..டடா-என்றே-மனம் விடாமலே வியந்திடும்
இடை-வி..டாது-சென்றிடும் ஆலவட்டத் தாயிடம்
உன்-மனம் அடங்கிடும் அதிசயம் கண்டிடு
அமைதியாய் அவளிடம் அமர்வதைக் கண்டிடு
(2)
அமைந்திடும் உன்-மனம் பெற்றிடும் அனுபவம் (2)
களைந்திடும் உன்-பவம் காத்திடும் அனுதினம்
களைந்திடும் உன்-பவம் .. காத்திடும் அனுதினம்
அடா..டடா-என்றே-மனம் விடாமலே வியந்திடும்
இடை-வி..டாது-சென்றிடும் ஆலவட்டத் தாயிடம்
நான்-எனும் நினைப்பினை அவள்-பதம் விலக்கிடும் ...ஆ..ம்..
நான்-எனும் நினைப்பினை அவள்-பதம் விலக்கிடும்
சக்தியை வழிபடும் சக்தியைத் தந்திடும்
நான்-எனும் நினைப்பு போய் யாரெனத் தோன்றிடும் (2)
யாரெனத் தெரிந்ததும் நாம்-நமைப் பார்க்கலாம்
நாம்-நமைப் பார்த்ததும் நாதனைப் பார்க்கலாம்
அடா..டடா-என்றே-மனம் விடாமலே வியந்திடும்
இடை-வி..டாது-சென்றிடும் ஆலவட்டத் தாயிடம்
நினைத்த-போது தோன்றிடும் அருள்-சுரக்குமவள்-முகம் (2)
நினைத்திடாத போதிலும் கூட-நின்று காத்திடும் (2)
அடா..டடா-என்றே-மனம் விடாமலே வியந்திடும்
இடை-வி..டாது-சென்றிடும் ஆலவட்டத் தாயிடம் .. ஆலவட்டத் தாயிடம்..
No comments:
Post a Comment