Monday, August 12, 2019

5. ஸ்ரீ ஞான-வல்லப கணபதீ (ஸ்ரீ ராமச்சந்திர க்ரிபாளு பஜமன)




 வாவா .. வாவா  ..
(MUSIC)
ஸ்ரீ ஞான-வல்லப கணபதீஎழில்-வீர மாருதி ஆலயம் (2)
புகழேந்தி வீதியில் ஞானப் பாதையின் ஜோதி..யாய்-ஒளிர் ஆலயம்
வாவா .. வாவா  ..
(MUSIC)
சன்னதியில் இவருடன் அம்ருதமென ஒளிவீச வீற்றிடும் துர்க்கையும்
சிவ ரூபமான-குரு மடித்த திருவடி ஆலினடி அமர் கோலமும்
ஸ்ரீ ஞான-வல்லப கணபதீ –எழில்-வீர மாருதி ஆலயம்
ஆஹா .. ஆஹா..
(MUSIC)
வா காண-இங்கு விசேஷ நாகரின் நித்ய..மருளிடும் தரிசனம்
அது கண்ட மானிடர் கொண்ட தோஷங்கள் செல்லக் கண்ட-நி..தரிசனம்
ஸ்ரீ ஞான-வல்லப கணபதீ –எழில்-வீர மாருதி ஆலயம்
வா வா வாவா 
(MUSIC)
இக-உலக சுகங்களில் முழுக-ஊறு  விடாது உன்னைத்-தொ..டர்ந்திடும்
ஆனாலும் இறை..அருட் பார்வை-விழ  அவை-யாவும் தூசெனப் பறந்திடும்
ஸ்ரீ ஞான-வல்லப கணபதீ –எழில்-வீர மாருதி ஆலயம்
ஆஹா .. ஆஹா..
(MUSIC)
நம் மனதில் அமைதீ-சேர நல்லவர்-சேர்க்கை மிக-மிக அவசியம்
அது கிடைக்க-நல்ல உபாயமென வேறேது இதைவிட ஆலயம்
ஸ்ரீ ஞான-வல்லப கணபதீ –எழில்-வீர மாருதி ஆலயம்
புகழேந்தி-வீதியில் ஞானப் பாதையின் ஜோதி..யாய்-ஒளிர் ஆலயம்
வாவா .. வாவா  ..




No comments:

Post a Comment