Thursday, October 22, 2026

40.சரணம் சரணம் | அழகு அழகு..ஐயப்பன் அழகு | ஞானாநந்தர்

சரணம் 

சரணம் சரணம்ஞானா..னந்தகுரு சரணம் (2)

அவர் அடிபணிந்தே செய்யவேண்டும் நாமத்தின் ஸ்மரணம்
சரணம் சரணம் சரணம்ஞானா..னந்தகுரு சரணம் (2)
காத்திடுமே ஞானானந்த குருபத சரணம் (2)
அது கணத்தினிலே செய்திடுமே பவபய ஹரணம் (2)
ஆஹா-அதன் மகிமைதனை சொல்லுதல் கடினம் (2) 
அதைப் பிடித்து-நாமும் செய்திடுவோம் வாழ்க்கையில் பயணம்(2)
சரணம் சரணம் சரணம்ஞானா..னந்தகுரு சரணம் (2)
பந்தமிலாப் பெருநிலையை அடைந்திட வேணும் (2)
அதைப் பெறுவதற்கு நமக்குதவும் திருவடி சரணம் (2)
ஓயும் மனம் உடன்விலகும் ஞானத்தின் க்ரஹணம் (2)
குரு பாதமலர் இருக்கும்- பொழுது வேறென்ன வேணும்
சரணம் சரணம் சரணம்ஞானா..னந்தகுரு சரணம் (2)
விண்ணெட்டும் வரை-நாமம் கூறிடவேணும் (2)
இந்த திக்கெட்டும் நம்-நாதம் ஒலித்திடவேணும் (2) 
மெய்யுருக நெஞ்சுருகப் பாடிடவேணும் (2)
அந்த ஞானானந்த சத்குருவைக் கூப்பிடவேணும் (20
சரணம் சரணம் சரணம்ஞானா..னந்தகுரு சரணம் (2)
அவர் அடிபணிந்தே செய்யவேண்டும் நாமத்தின் ஸ்மரணம் (2)
சரணம் சரணம் சரணம்ஞானா..னந்தகுரு சரணம் (2) (fast)
ஞானா..னந்தகுரு சரணம் (n)

முதல் பக்கம்

No comments:

Post a Comment