Wednesday, January 15, 2020

33. காண்பாயப்பா ( பழம் நீயப்பா ) ****


( Aligned to KARAOKE)


காண்பாயப்பா ..
வந்து காண்பாயப்பா
திருக்காட்சி காண்பாயப்பா
காண்பாயப்பா வந்து காண்பாயப்பா
திருக்காட்சி காண்பாயப்பா
நகர்-தன்னில் ..
இந்நகர் தன்னில் திருத்தேரில் இறையோனின் எழில் யாவும்
காண்பாயப்பா வந்து காண்பாயப்பா
திருக்காட்சி காண்பாயப்பா
(MUSIC)
கண்-கொண்டு காணாயப்பா
உந்தன் கண்-கொண்டு காணாயப்பா
வேறு உலகத்தில் மிதப்பாயப்பா (2)
மூர்த்தியைக் காண்பாயப்பா
இறை மூர்த்தியைக் காண்பாயப்பா
உலகத்தில் இதுபோலே எதுமில்லை எனல்-போல
எழில்தன்னை காண்பாயப்பா
(MUSIC)
நானுண்டென் வீடுண்டு உறவென்ற சுகமுண்டு
என்றால் உய்தல்-என்றுண்டு
(2)
ஈரேழு லோகங்கள் கொண்டாடும் ஐயனே
வந்தார்-நம் இடத்தைக் கண்டு
ஈரேழு லோகங்கள் கொண்டாடும் ஐயனே
வந்தாரே நமக்கே என்று
நோயொன்று..
பிறப்பென்று..
நோயொன்று பிறப்பென்று
நமை-விட்டு எந்நாளும் 
போகாத சாபம் உண்டு
நம் மெத்தனம் தனைக் கண்டும்
மன்னித்து நம்மிடம்
வந்ததே குணத்தின் குன்று
(MUSIC)
தேரதனில்-நிஜம் வந்து-தரும் இதம்
கிடைக்காது வந்திடாய்-நீ 
(2)
மாயமெனும்-அலை மாய்ப்பவரை-சிலை
என்றாக எண்ணிடா..தே
(2)
வேறு-ஒரு பேறு ..
ஏதிருக்குக் கூறு..
வேறு-ஒரு பேறு ஏதிருக்குக் கூறு
 திருமுகம்  பார்க்க வா நீ
போற்றிச் சொல்வாய்
 பாடிச் செல்வாய்
தேருடன் கூடவே  நீ
தேருடன் கூடவா நீ





No comments:

Post a Comment