Tuesday, April 11, 2017

4.b) நாம் ஆரத்தி காட்டிடுவோம்(ஓம் ஜெய் ஜெகதீச ஹரே)-Chorus


Printable Lyrics

நாம் ஆரத்தி-காட்டிடுவோம் நல் ஆரத்தி-காட்டிடுவோம் 
அழகுடன்-வல்லப கணபதி அவருடன்-வீரத்தின் மாருதி
அருள்தர வேண்டியே-நாம் நல் ஆரத்தி காட்டிடுவோம்

மாதா துர்க்க்கையின் சன்னதி அதில்-அழ..குடன்-சிரிப்பாள்
அன்னை அழகுறச் சிரித்திருப்பாள்
அவள்-பதம் புகல்-எனச் சேர
அவள்-புகழ் தினம்-தினம் பாட
பக்தியுடன் பாங்காய்
நல் ஆரத்தி-காட்டிடுவோம் 

மாத-பிதாவுக்கும்-மேலே அருள்-குரு தட்சி..ணா-மூர்த்தி
அருள் தரும் குரு தட்சிணா-மூர்த்தி
தருமிசை நமக்கெனவே தான்
அருள்குரு நமக்கெனவே தான்
அமர்ந்திருக்கார் அவர்க்கும்
நல் ஆரத்தி-காட்டிடுவோம் 

கயிலையிலே-அமர் நாதர் அவர்-மா..தொருபாகர்
அருள் தரும்-மா..தொருபாகர்
அவர் கழுத்..தினில்-திகழ் நாகர்
தோஷங்கள்  விலக்கிடும் ராஜர் 
கொலுவிருக்கார் அவர்க்கும்

நல்-ஆரத்தி காட்டிடுவோம்

வினைப்பயன் போய்விட-வேண்டிடு அதைத்தரத் தானிருக்கார்
ஸ்வாமி அதைத் தரத் தானிருக்கார்
ஜெய் கணபதி-எனக் கூறி
ஜெய் மாருதி எனப் போற்றி
  நிதானமாய் அழகாய்
நல் ஆரத்தி-காட்டிடுவோம்

ஒவ்வொரு உயிரிலும்-ஆத்மா அது அந்தர்யாமி
ஜோதி அது-அந்தர்யாமி
ப்ரேம ரூபமதைப் பார்த்திட
ஆத்ம ரூபம் ஞானக் கண்பட
பக்தியின் உருவாகி
நல் ஆரத்தி-காட்டிடுவோம் 


அழகாய் ஆரத்தி காட்டுவோம் பலபேர் காணும்படி
ஒளி பலபேர் காணும்படி
அதில்-இருள் எழாது ஓய்ந்திட
அதில் ஒளி விடாது ஓங்கிட
எங்கும் வீசும்படி
நல் ஆரத்தி-காட்டிடுவோம்

தீன பந்து என்றும்-நீதான் ஆதரவும்-நீதான்
எங்கள் ஆதரவும்-நீதான்
எனவே பாடிப் பணிந்து
எனவே கண்கள் கசிந்து
மோகமிலா நெஞ்சில்
நல் ஆரத்தி-காட்டிடுவோம்

அனைவரும் ஒன்றில் ஒன்றாவோம்
ப்ரார்த்தனை செய்வோம் நாம்
ஒன்றி ப்ரார்த்தனை செய்வோம் நாம்
பண்பால் பக்தர்கள் ஆனோம்
அன்பால் ஓர்மனம் ஆனோம்
சந்திரனின் மேலாய்
நல் ஆரத்தி காட்டிடுவோம்

நாம் ஆரத்தி-காட்டிடுவோம் நல் ஆரத்தி-காட்டிடுவோம் 
அழகுடன்-வல்லப கணபதி அவருடன்-வீரத்தின் மாருதி
அருள்தர வேண்டியே-நாம் நல் ஆரத்தி காட்டிடுவோம்



No comments:

Post a Comment