வாரீரோ நாடி-இங்கு ஓடி-இங்கு வாரீரோ (2)
பக்தர்-பலர் கூடும்-இந்த ஆலயத்தைக் காணீரோ
அழகுடனே கணபதியும் அருளுகிறார் காணீரோ (2)
அவருடனே மாருதியும் அருள்-புரிவார் வாரீரோ
எழிலுடனே துர்க்கையன்னைச் சிரிப்பதனைக் காணீரோ
(2)
ஒரு முறை-நீர் பார்த்துவிட்டால் மறக்க-மாட்டீர்
வாரீரோ
ஸ்வாமி-தட்சிணா மூர்த்தி-ஞானக் கண்-திறப்பார்
வாரீரோ (2)
நமக்கெனவே கண்ணை-மூடி அமர்ந்திருக்கார் காணீரோ
வாரீரோ வாரீரோ ஓடி-இங்கு வாரீரோ (2)
வாரீரோ வாரீரோ வாரீர்-இங்கு வாரீரோ (2)
No comments:
Post a Comment