கோடானு கோடி-ஜென்மப் பாவங்களும் ஏலேலோ
ஓர்-நொடியில் போக்கும்-ராம நாமடி ஏலேலோ
அதன்-மஹிமை சொல்லுதற்குக் கடினமடி-ஏலேலோ
(2)
ஆனால்-சொல்லி உருகிடவே எளிதின்-எளிது ஏலேலோ
சின்னதென அதனை-லேசில் எண்ணிடாதே ஏலேலோ (2)
அதன்-பலமோ எதுக்குமில்லே தெரிஞ்சுக்க-நீ
ஏலேலோ
ராமன்-பெயரைச் சொன்னால்-நாக்கு இனிக்குதடி
ஏலேலோ (2)
மனம்-முழுதும் புகுந்து-இன்பம் அளிக்குதடி
ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலேலோ ஏலேலோ (2)
ஏலேலோ.. ஏலேலோ.. ராம-ராம ஏலேலோ (2)
No comments:
Post a Comment