Tuesday, April 11, 2017

1. பண்பாடு-வந்து பண்பாடு (செந்தமிழ் நாடென்னும் போதினிலே ) ****


(Aligned to KARAOKE)

பண்பாடு-வந்து பண்பாடு-துர்க்கை அன்னையைப் போற்றி-நீபண்பாடு
பண்போடு-மற்றும் அன்போடு-நாம் வாழ்ந்திட வேண்டியே பண்பாடு
தந்தானே/(MUSIC)
எங்கும்-நிறை-பரப்ரம்மமிவள்-இந்த அன்னையைப் போற்றி-நீ பண்பாடு
புன்னைகையால்-மனம் எங்கும்-நிறைந்திடும் துர்க்கையைப் போற்றியே-பண்பாடு
தந்தானே/(MUSIC)

வேதம்-உரைக்கும் அவள்-பீடு-அதை அன்னையின் சந்நிதியில்-ஓது
ஓதிடும்-பேருக்கு மட்டுமல்ல-அதைக் கேட்பவர்க்கும்-வரும் நல்லபோது
(MUSIC)

சொல்லில்-விளக்க முடியாது-அவள் அன்பை-விளக்க முடியாது
என்றாலும்-நாம்-நல்லத் தோத்திரத்தில்-அதைப் பாடாதிருக்க-முடியாது
தந்தானே/(MUSIC)

*ஆயிரம்அன்னையின் மேலாகும்-அவள் அன்பு-எனத்-தெய்வ வாக்காகும்
என்றைக்கும்-பக்தர்கள் தேடிவரும்-இந்த கோவிலை நாடத்-துயர்போகும்
தந்தானே/(MUSIC)

சித்திருபாக்கத்தில் முத்து-லக்ஷ்மி-நகர் உள்ளவிக்கோவிலை நீ-நாடு
என்றும்-அருள்-தரும் துர்க்கையன்னை-புகழ் சொல்லி-உருகியே நீபாடு
/(MUSIC)

வந்து-விடு-இங்கு வந்து-விடு-வந்து உந்தன்-கவலையை விட்டு-விடு
என்னதல்ல-இனி உன்னதம்மா-என துர்க்கையன்னையிடம் தந்து-விடு

பண்பாடு-வந்துபண்பாடு-துர்க்கைஅன்னையைப்போற்றிநீபண்பாடு
பண்பாடுமற்றும்அன்போடு-நாம் வாழ்ந்திட வேண்டியே பண்பாடு

தந்தானே/(MUSIC)



*அம்பாள் கருணையில் ஆயிரம் ஆயிரம் அன்னைகளுக்கும் மேலானவள் என்பது “தெய்வத்தின் குரல்”.


No comments:

Post a Comment