Thursday, January 18, 2024

4.ராம ஸ்ரீராமச்..சந்த்ரா நமோநம(நாத பிந்து கலாதி நமோ நம)

 

ராம ஸ்ரீராமச்..சந்த்ரா நமோநம
பக்த ஹ்ருதய நிவாசா நமோநம
மாய மாநுஷ வேஷா நமோ நம
அருள் செய் ஸ்ரீ ராமா


வில்லை வளைக்கின்ற வீரத்தின் சிறப்பு நீ
சொல்லைக் காக்கின்ற தர்மத்தின் பிறப்பு நீ
எல்லை இல்லாத ப்ரேமையின் ரூபமாய் நெஞ்சில் நிறைவாயே

ராம நாமத்தைக் கனிவோடு ஓதலால் நெஞ்சில் தேனாறு பாய்ந்தோடும் ஆதலால்
ஈர நெஞ்சாகும் பாகதைப் பாடலால்
எவ்விதம் உரைப்பேனே

நாதப்ரம்மத்தின் உள்ளூடும் ராமராம்
வேதம்காட்டிடும் சொல்லாகும் ராமராம்
போதம் எல்லாமும் ஆகிய ராமராம்
அதனை உரைப்பேனே

ப்ரபஞ்சம் உள்ளூடும் ஓசையும் ராமராம்
அதனில் நின்றாடும் எல்லாமும் ராமராம்
நாமரூபங்கள் காட்டிடும் ராமராம்
சொல்வேன் ராம் ராம் ராம்

உயிரில் இணைந்தாடும் உணர்வாகும் ராமராம்
உணர்வை உயர்வாக்கும் ப்ரக்ஞானம் ராமராம்
கனவில் நனவாகும் உரைப்போர்க்கு ராமராம்
எங்கும் ராம் ராம் ராம்

பார்புகழ் பாரதம் தோன்றி அயோத்தியில்
மாபெரும் ஆறுபோல் வேகத்தில் கூடியும்
தடங்கலைத் தாண்டியும் ஓடி-தன் மேன்மையைக்
காட்டிய ராம்ராம்ராம்

அண்டம் படைத்திங்கு எல்லாமும் ஆனதாம்
அணுவின் உள்ளேயும் அணுவாகி ஆடுதாம்
தொண்டரின் உள்ளத்தில் ஆன்மாவென்றானதாம்
எல்லாம் ராம் ராமே

தோன்றி வளர்கின்ற ஸ்வயமான ஜோதி ராம்
என்றும் உறைகின்ற விதமான ஆதி ராம்
மண்ணில் பிறக்கின்ற யாவிலும் உயிரும் ராம்
உயிரின் உயிர் ராம்ராம்

ராம ஸ்ரீராம ஜெயராம ராமராம்
ராம ஜெயராம ஸ்ரீராம ராமராம்
ராம ராம்ராம ராம்ராம ராமராம்
சர்வம் ராம்-ராம்-ராம்
(2)
சர்வம் ராம்-ராம்-ராம் (2)




Monday, January 8, 2024

3.சின்ன எழில் வில்லெடுத்து(சுட்டதிரு நீறணிந்து)**

 


சின்ன எழில் வில்லெடுத்து தித்தித்திடும் பேர் எடுத்து
உள்ளம்-கொள்ளை கொண்டு நின்ற ராமனே... 

என்றும் புண்ணிய-அ..யோத்திபுரி தன்னில்-அருள் செய்து-நிற்க 
மானிடத்தில் வந்த தெய்வ ராமனே..
(2)
(MUSIC)
ஓரவிழிப் பார்வை-தன்னில் நூறு-மொழி பேசி-எங்கள்
நெஞ்சத்தைக் கவர்ந்திழுக்கும் ராமனே 
நெஞ்சத்தைக் கவர்ந்திழுக்கும் ராமனே  
(1+SM+1)
எங்கள் ஈரவிழி பார்த்திரங்கி எங்களையும் உன்னடியில்
தங்க-வைக்க வேண்டும் அருள் போதனே .. 
தங்க-வைத்து செய்திடருள் போதனை 
(2)
சின்ன எழில் வில்லெடுத்து தித்தித்திடும் பேர் எடுத்து
உள்ளம்-கொள்ளை கொண்டு நின்ற ராமனே... 

என்றும் புண்ணிய-அ..யோத்திபுரி தன்னில்-அருள் செய்து-நிற்க 
மானிடத்தில் வந்த தெய்வ ராமனே..
(MUSIC)
நாளும்-உண்டு நாங்கள்-உண்டு எங்கள்-தொழில் ஒன்று-உண்டு
என்றிருந்தோம் எங்கள்-இக வாழ்விலே (2)
(1+SM+1)
எங்கள் உள்ளங்களில் நின்றிடவும் உன்னைச் சென்று கும்பிடவும் ஓடி அருள் கோவில் கொண்ட  ராமனே
ஓடி வந்து கோவில் நின்ற ராமனே
(2)
சின்ன எழில் வில்லெடுத்து தித்தித்திடும் பேர் எடுத்து
உள்ளம்-கொள்ளை கொண்டு நின்ற ராமனே... 

என்றும் புண்ணிய-அ..யோத்திபுரி தன்னில்-அருள் செய்து-நிற்க 
மானிடத்தில் வந்த தெய்வ ராமனே..
என்றும் புண்ணிய-அ..யோத்திபுரி தன்னில்-அருள் செய்து-நிற்க 
மானிடத்தில் வந்த தெய்வ ராமனே







2.ராம நாமாவைக் கூறா நா ஏனடா(கிருஷ்ண கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா)


ராம நாமாவைக் கூறா நா ஏனடா
ராம நாமாவின் மேலாக ஏதடா
(2)
ராம நாமாவே நால்வேதம் ஓதடா (2)
அதன் மேலாக ஓர் யோகம் ஏதடா (2)
ராம நாமாவைக் கூறா நா ஏனடா
ராம நாமாவின் மேலாக ஏதடா

மெய்யில் மெய்யென்று உள்நின்றி..ருப்பதாம்
கண்ணில் எவருக்கும் தோன்றாதி..ருப்பதாம்
தெய்வம் என்றாகும் ஆத்மாவே தானதாம்
அதனைக் காட்டும் பேர் ராம் ராம் ராம் என்பதாம் (2)
ராம நாமாவைக் கூறா நா ஏனடா
ராம நாமாவின் மேலாக ஏதடா

ராமநாமாவைச் சொல்லாயோ நெஞ்சமே
இனி ஆனந்தத்....திற்கேது பஞ்சமே
(2)
ராமநாமாவைச் சொல்லாயோ நெஞ்சமே....
இனி-பிறப்பில்லை..யே கிட்டும் மோக்ஷமே
(2)
ராம நாமாவைக் கூறா நா ஏனடா
ராம நாமாவின் மேலாக ஏதடா

வாழ்வில் எந்நாளும் துன்பங்கள் மோதி யார்
என்று தயை கொண்டு பார்க்காமல் வாட்டும் பார்
(2)
அந்த நோய்போக சொல்வாய் அயோத்தியா (2)
கோயில் கொண்டாளும் ராம்பேரை பக்தியாய் (2)

ராம நாமாவைக் கூறா நா ஏனடா
ராம நாமாவின் மேலாக ஏதடா
(2)
ராம ராம்ராம ராம்ராம ராமராம் 
ராம ராம்ராம ராம்ராம ராமராம்
(2)
ராம ராம்ராம ராம்ராம ராமராம் 
ராம ராம்ராம ராம்ராம ராமராம்
(2)
ராமராம் ராம்ராம ராம்ராம ராமராம் (2)

1.அருவாய் உருவாய்(வருவாய் வருவாய் வருவாய் அம்மா)


அருவாய் உருவாய் ஸ்ரீராம ராம்
உயிராய் உணர்வாய் ஆத்மாபிராம்
அருவாய் உருவாய் ஸ்ரீராம ராம்..
தாய்தந்தை சொல்காத்த மகனான நீயே
பாய்போல முள்தன்னைக் கொண்டாயே ஸ்வாமி
தாளாத துயர் கொண்டும் கலங்காமல் நீயே
விடாமல் தர்ம வழியில் சென்றாயே
ராமா... ராமா...ராமா.. ராமா..


இறை இசைப் பாடல்கள் - V - ராமர்

 

1.அருவாய் உருவாய்(வருவாய் வருவாய் வருவாய் அம்மா)

2.ராம நாமாவைக் கூறா நா ஏனடா(கிருஷ்ண கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா)

3.சின்ன எழில் வில்லெடுத்து(சுட்டதிரு நீறணிந்து)**

4.ராம ஸ்ரீராமச்..சந்த்ரா நமோநம(நாத பிந்து கலாதி நமோ நம)






Friday, November 17, 2023

41.வெள்ளைத் திருமண்ணிடையில்(சுட்டதிருநீறெடுத்து)**

 

வெள்ளைத் திருமண்ணிடையில் குங்குமச் சிந்தூரமிட்டு உள்ளங்களைக் கொள்ளை இட்ட அய்யனே 
உன்னை விட்டு விட்டுச் செல்வதற்குக் கொஞ்சங்கூட எங்களுக்கு இஷ்டமில்லை வேங்கட கோவிந்தனே 
(2)
(MUSIC)
ஓரவிழிப் பார்வை-தன்னில் நூறு-மொழி பேசி-எங்கள்
நெஞ்சத்தைக் கவர்ந்திடும்-கோ.விந்தனே 
நெஞ்சத்தைக் கவர்ந்திடும் கோவிந்தனே 
(1+SM+1)
எங்கள் ஈரவிழி பார்த்திரங்கி எங்களையும் உன்னடியில்
தங்க-வைக்க என்ன-உந்தன் கஷ்டமே (2)
(2)
வெள்ளைத் திருமண்ணிடையில் குங்குமச் சிந்தூரமிட்டு உள்ளங்களைக் கொள்ளை இட்ட அய்யனே 
உன்னை விட்டு விட்டுச் செல்வதற்குக் கொஞ்சங்கூட எங்களுக்கு இஷ்டமில்லை வேங்கட கோவிந்தனே 
(MUSIC)
நாளும்-உண்டு நாங்கள்-உண்டு எங்கள்-தொழில் ஒன்று-உண்டு
என்றிருந்தோம் எங்கள்-இக வாழ்விலே (2)
(1+SM+1)
தினம் தின்று-வளர்..கின்ற-உடல் சென்று-விழ உன்னடியை 
விட்டு-எழ எங்களுக்குத் தோணல்லே (2)
(2)

வெள்ளைத் திருமண்ணிடையில் குங்குமச் சிந்தூரமிட்டு உள்ளங்களைக் கொள்ளை இட்ட அய்யனே 
உன்னை விட்டு விட்டுச் செல்வதற்குக் கொஞ்சங்கூட எங்களுக்கு இஷ்டமில்லை வேங்கட கோவிந்தனே 
(2)




40. கருடபிரானே (கனவிலும் பழனி)

 

கருட பிரானே இன்பம் அருளும் பிரானே (2)
வாஹனமாய் நாரணனை ஏந்திடும் பிரானே (2)
கருட பிரானே இன்பம் அருளும் பிரானே (2)
அனைத்து-தேவ தேவியர்கள் துதித்தி..டும்-பிரானே
அருளை-வழங்க அமுதக்கலசம் ஏந்தி..டும்-பி..ரானே
கருட பிரானே இன்பம் அருளும் பிரானே (2)
கருணை-பொங்க அருள்விழியால் பார்த்திடும்-பி..ரானே 
இறக்கை-கொண்டு இடரைக்-கொன்று காத்திடும்-பி..ரானே 
கருட பிரானே இன்பம் அருளும் பிரானே (2)
விஷத்தின்-கொடுமை முறித்துச்-சிறந்து பறந்திடும் பிரானே 
நாக தோஷம் போக்கி-மோக்ஷம் தந்திடும் பிரானே
கருட பிரானே இன்பம் அருளும் பிரானே (2)
உடல்நலத்தை அருளி-நோய்கள் போக்கிடும் பிரானே 
மனது ஓங்க ஞானப் பாதை காட்டிடும் பிரானே
கருட பிரானே இன்பம் அருளும் பிரானே (2)
பட்சிராஜன் கருடபிரான் மகிமை-போற்றி நாமே 
பாடப்-பாட கிடைக்கும்-மீட்சி விலகும்-பாபம் தானே
கருட பிரானே இன்பம் அருளும் பிரானே (3)


** மேற்காணும் இந்தப் பாடல் சிறப்பு வாய்ந்த கருட மந்திரத்தின் கருப் பொருள் அமைய புனையப்பட்டது**

ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப பெற்றே பல சித்திகளைப் பெற்றார். 

கருட மந்திரம்
-----------------------
கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்திர சத்ரவே 
வாஹனாய மஹாவிஷ்ணோ தார்க்ஷயாய அமித தேஜயே 
ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய 
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய 
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா

கருட மந்த்ரம் பொருளுரை 
--------------------------------------------
அமிர்த கலசத்தை தன் கையில் ஏந்தியவரே, அனைத்து தேவ, தேவியர்களால் வணங்கப்படுபவரே,
 இவரின் பெருமையை யாராலும் விவரிக்க முடியாதவராக விளங்குபவர்.
இவரின் இறக்கை காற்று அண்டங்களை எல்லாம் நடுநடுங்கச் செய்யும். 
இவரை வணங்கினால் பாம்பு விஷம் நீங்கும். சக விஷத்தால் ஏற்பட்ட வியாதிகளும் நீங்கும்.
பட்சிராஜனான கருட பகவானை நான் சிந்தையில் நிறுத்தி ஆராதிக்கிறேன்.



இறை இசைப் பாடல்கள் -  I